பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல்


              பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல்

தேர்வில் நான்கு சொற்கள் கொடுக்கப்பட்டிருக்கும். அதில் மூன்று சொற்கள் ஒரே
பொருளையோ ஒரே காலத்தையோ சார்ந்திருக்கும். ஒரு சொல் மட்டும் பொருந்தாமல்
தனித்து நிற்கும். அச்சொல் எதுவென கண்டறிய வேண்டும்.
மேலும் கீழே குறிப்பிட்டுள்ளவற்றை தெரிந்து கொண்டால் இன்னும் எளிமையாக
இருக்கும்.

1. மூவண்ணம் - காவி, வெண்மை, பச்சை
2. மூவேந்தர்கள் - சேரன், சோழன், பாண்டியன்
3. முக்கனி - மா, பலா, வாழை
4. முத்தமிழ் - இயல், இசை, நாடகம்
5. முப்பால் - அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால்
6. முக்காலம் - இறந்த காலம், நிகழ் காலம், எதிர்காலம்
7. முந்நீர் - ஆற்றுநீர், ஊற்றுநீர், மழைநீர்
8. மூன்று முரசு - கொடை முரசு, படை முரசு, மங்கள முரசு
9. முச்சங்கம் - முதற்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம்
10. மூவிடம் - தன்மை, முன்னிலை, படர்க்கை
11. நாற்திசை - கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு
12. நாற்பால் - அரசன், அந்தணன், வணிகன், வேளாளன்
13. நான்கு குணம் - அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு
14. நால்வகை சொல் - பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல்
15. நான்மறை - ரிக், யஜூர்,சாமம், அதர்வணம்
16. நாற்படை - தேர், யானை, குதிரை, காலாட்படை
17. பாவகை - வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா
18. ஐம்பெருங்காப்பியங்கள் - சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக
சிந்தாமணி,வளையாபதி, குண்டலகேசி
19. ஐஞ்சிறுங்காப்பியங்கள் - சூளாமணி, நீலகேசி, யசோதர காவியம், நாககுமார
காவியம், உதயணகுமார காவியம்
20. ஐந்தொகை - முதல், மரபு, செலவு, இருப்பு, ஆதாயம்
21. ஐம்பால் - ஆண்பால், பெண்பால், பலர் பால், ஒன்றன் பால், பலவின் பால்
22. ஐம்பெரும்பொருள் - நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம்
23. ஐம்பொறி - மெய், வாய், கண், மூக்கு, செவி
24. ஐம்புலன் - ஊறு, சுவை, ஒளி, நாற்றம், ஓசை
25. ஐந்திணை - குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை
26. ஐம்பெருங்குழு - சாரணர், சேனாதியார், தூதர், புரோகிதர், அமைச்சர்
27. அறுசுவை - இனிப்பு, கசப்பு, புளிப்பு, கார்ப்பு, உவர்ப்பு, துவர்ப்பு
28. பெரும்பொழுது - கார்காலம், குளிர்காலம், முன்பனி, பின்பனி, இளவேனிற்காலம்,
முதுவேனிற்காலம்
29. சிறுபொழுது - காலை, நண்பகல், ஏற்பாடு, மாலை, யாமம், வைகறை
30. ஏழிசை - குரல், துத்தம், கைக்கிளை, உழை, கிளி, விளரி, தாரம்
31. பெண்களின் ஏழு பருவங்கள் - பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை,
தெரிவை, பேரிளம்பெண்
32. எட்டுத்தொகை - நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல்,
கலித்தொகை, அகநானூறு, புறநானூறு
33. நவரத்தினங்கள் - மரகதம், மாணிக்கம், முத்து, வைரம், வைடூரியம், கோமேதகம்,
34. நவதானியங்கள் - நெல், துவரை, பச்சைப்பயறு, உளுந்து, எள், அவரை, கடலை,
கொள்ளு, கோதுமை
35. ஆண்பால் பிள்ளைத்தமிழ் 10 பருவங்கள் - காப்பு, செங்கீரை, தால், சப்பாணி,
முத்தம், வருகை, அம்புலி, சிற்றில், சிறுபறை, சிறுதேர்
36. பெண்பால் பிள்ளைத்தமிழ் 10 பருவங்கள் - காப்பு, செங்கீரை, தால், சப்பாணி,
முத்தம், வருகை, அம்புலி, அம்மாணை, கழங்கு, ஊசல்
37. புறத்திணை - வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, நொச்சி, உழிஞை, தும்பை,
வாகை, பாடாண், பொதுவியல், கைக்கிளை,பெருந்திணை
38. தொல்காப்பிய அகப்பொருள் கோட்பாடுகள் - - முதல் பொருள், கருப்பொருள்,
உரிப்பொருள்
39. இரட்சண்ய யாத்திரிகத்தின் ஐந்து பருவங்கள் - ஆதிபருவம், குமாரப் பருவம்,
நிதான பருவம், ஆரண்யப் பருவம், இரட்சண்ய பருவம்
40. இராவண காவியத்தின் ஐந்து காண்டங்கள் - தமிழகக் காண்டம், இலங்கைக்
காண்டம், விந்தக் காண்டம், பழிபுரி காண்டம், போர்க் காண்டம்
41. பாஞ்சாலி சபதத்தின் ஐந்து சருக்கங்கள் - சூழ்ச்சிச் சருக்கம், சூதாட்டச்
சருக்கம், அடிமைச் சருக்கம், துகிலுரிதல் சருக்கம், சபதச் சருக்கம்
42. மூவகை மொழிகள் - தனிமொழி, பொதுமொழி, தொடர்மொழி
43. உறுதிப் பொருள்கள் - அறம், பொருள், இன்பம், வீடு
44. திரிகடுகம் - சுக்கு, மிளகு, திப்பிலி
45. தேவாரம் பாடிய மூவர் - சம்பந்தர், அப்பர், சுந்தரர்

Comments