TNPSC ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை அறிதல்


ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை அறிதல்

1. இரை, இறை என்ற சொற்களின் சரியான பொருள் - உணவு, கடவுள்
2. உறவு, உரவு என்ற சொற்களின் சரியான பொருள் - சொந்தம், வலிமை
3. கலி, களி என்ற சொற்களின் சரியான பொருள்- துன்பம், மகிழ்ச்சி
4. கான், காண் என்ற சொற்களின் சரியான பொருள் - காடு, பார்
5. தின்மை, திண்மை என்ற சொற்களின் சரியான பொருள் - தீமை, வலிமை
6. நிரை, நிறை என்ற சொற்களின் சரியான பொருள் - வரிசை, எடை
7. புறம், புரம் என்ற சொற்களின் சரியான பொருள் - பக்கம், ஊர்
8. மரை, மறை என்ற சொற்களின் சரியான பொருள் - மான், வேதம்
9. வலி, வளி என்ற சொற்களின் சரியான பொருள் - துன்பம், காற்று
10. வன்மை, வண்மை என்ற சொற்களின் சரியான பொருள் - உறுதியான, கொடை
11. விலா, விழா என்ற சொற்களின் சரியான பொருள் - எலும்பு, திருவிழா
12. அரம், அறம் என்ற சொற்களின் சரியான பொருள்- ஒரு கருவி, தருமம்
13. கலம், களம் என்ற சொற்களின் சரியான பொருள் - கப்பல், போர்க்களம்
14. கிலி, கிளி என்ற சொற்களின் சரியான பொருள் - அச்சம், பறவை
15. திரை, திறை என்ற சொற்களின் சரியான பொருள் - அலை, கப்பம்

Comments