திருமணத் தடை நீங்கி விரைவில் திருமணமாகப் பரிகாரம்


 திருமணத் தடை நீங்கி விரைவில் திருமணமாகப் பரிகாரம்



வளர்பிறையில் வியாழக்கிழமை அன்று புது காட்டன் சிகப்புப் புடவை வாங்கி அதைத் திரி போல் கத்தரித்துக் கொஞ்சம் ஜவ்வாது தடவி வைத்துக் கொள்ளவும்.

அடுத்த நாளான வளர்பிறை வெள்ளிக்கிழமை அதிகாலையில் சுக்ர ஹோரையில் அந்தத் திரியால் விளக்கேற்றி அம்பாளை அர்ச்சித்து மந்திரம் ஜெபித்து வழிபட்டு வரவும்.

முதல் நாள் மட்டும் சுக்ர ஹோரையில் விளக்கேற்றவும்.மற்ற நாட்களில் வழக்கமாக விளக்கேற்றும் நேரங்களில் விளக்கேற்றி வழிபட்டு வரவும்.

விளக்கில் எண்ணெய் ஊற்றும் அகலில் ஒரு சிறு கல்கண்டு ஒன்றைப் போட்டு  வைக்கவும்.

விளக்கைக் குளிர வைத்த பின்னர்  விளக்குத் திரியில் உள்ள கருக்கை எடுத்து நெற்றியில் வைத்து வரலாம் அல்லது தலையில்  தடவிக் கொள்ளவும்.

இதைத் தொடர்ந்து செய்து வரத் திருமணத் தடை நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும்.

Image result for marriage
வாழ்க வையகம் !!  வாழ்கவளமுடன் !!

Comments