குரு தோஷ நிவர்த்தி பரிகாரம்


                  குரு தோஷ நிவர்த்தி பரிகாரம்

                    
                                             Image result for guru bhagavan


உங்கள் ஜாதகத்தில் குரு க்ரஹ தோஷம் உள்ளது என்று ஜோதிடர் கூறினால் அதன் பாதிப்பு நீங்கித் திருமணம் மற்றும் வாழ்வில் சுப காரியங்கள் இனிதே நடைபெறக் கீழ்க்கண்ட செலவற்றஇஎளிய பரிகாரங்களில் ஏதேனும் ஒன்றோ அல்லது அதற்கு மேலோ செய்து வர விரைவில் நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம்.


1.அதிகாலையில் எழுந்துஇகுளித்துவிட்டு நெற்றியில் மஞ்சள்பொடிஇசந்தனம் அல்லது குங்குமம் வைத்துக் கொள்ளவும்.

2.அரசமர வேருக்கு வலது உள்ளங்கையில் பட்டுச் செல்லும்படி  நீர் ஊற்றவும்.
3.வீட்டிலோ அல்லது வீட்டுத் தோட்டத்திலோ மஞ்சள்நிறமான பூக்கள் கொண்ட செடிகளை வளர்க்கலாம்இ

4.முடிந்தால் வியாழக்கிழமை தோறும் விரதமிருக்கலாம்.அல்லது அரை வயிறு உண்டு இதகாத மற்றும் கெட்ட வார்த்தைகள் பேசாமல் இருக்கவும்.

5.வியாழக்கிழமை அன்று மௌன விரதம் இருக்கலாம்.நாள் முழுக்க மௌன விரதம் இருக்க முடியாதவர்கள் வியாழக்கிழமை அன்று அதிகாலை 6 மணிக்குள் குளித்து முடித்து 6 முதல் 7 மணி வரை மௌனமாக இருந்து ஏதேனும் மந்திரங்களை மனதிற்குள் ஜெபித்து வரலாம்.அல்லது தியானம் செய்யலாம்.

6.கீழே உள்ள குரு யந்திரத்தை ஒரு தூய்மையான வெள்ளைப் பேப்பரில் மஞ்சள் பொடியும்இபன்னீரும் கலந்த கலவையினால் வரைந்து 4 மூலைகளிலும் சந்தனம்இகுங்குமம் வைத்து பிரேம் செய்து வடக்குப் பக்கச் சுவற்றில் மாட்டி வணங்கி வரவும்.

குருபகவான் எண் யந்திரம்



  


வாழ்கவளமுடன்

Comments