சிறப்புத் தொடரால் குறிக்கப்பெறும் சான்றோர்கள்


               சிறப்புத் தொடரால் குறிக்கப்பெறும்      சான்றோர்கள்

1. திருவருட்பிரகாச வள்ளலார் என அழைக்கப்படுபவர் - இராமலிங்க அடிகளார்
2. பகுத்தறிவுக்கவிராயர் என அழைக்கப்படுபவர் - உடுமலை நாராயண கவி
3. செந்நாப்போதார், தெய்வப்புலவர், நாயனார் என்ற பெயர்களால் சிறப்பித்துக்
கூறப்படுபவர் - திருவள்ளுவர்
4. தமிழ்த்தாத்தா என அழைக்கப்படுபவர் - உ.வே.சாமிநாதர்
5. கவிராட்சசன் என்ற பெயரால் சிறப்பித்துக் கூறப்படுபவர் - ஒட்டக்கூத்தர்
6. கவிச்சக்ரவர்த்தி, கல்வியில் பெரியவர் கம்பர், கம்பன் வீட்டு கட்டுத்தறியும்
7. பாட்டுக்கொரு புலவன் என அழைக்கப்படுபவர் - பாரதியார்
8. புரட்சிக் கவிஞர், பாவேந்தர் என அழைக்கப்படுபவர் - பாரதிதாசன்
9. தண்டமிழ் ஆசான் இத்தொடரால் குறிக்கப்பெறும் சான்றோர் - சீத்தலைச் சாத்தனார்
10. வைக்கம் வீரர், பெரியார் என அழைக்கப்பட்டவர் - ஈ.வெ.ராமசாமி
11. தமிழ்த்தென்றல் இத்தொடரால் குறிக்கப் பெறும் சான்றோர் -
திரு.வி.கலியாணசுந்தரனார்
12. தேசியம் காத்த செம்மல் என அழைக்கப்படுபவர் - பசும்பொன் முத்துராமலிங்க
தேவர்
13. மக்கள் கவிஞர் என அழைக்கப்பட்டவர் - பட்டுக்கோட்டைக் கல்யாண சுந்தரம்
14. வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் தானும் வாயடியதாகக் கூறியவர் -
இராமலிங்க அடிகளார் (எ) திருவருட்பிரகாச வள்ளலார்
15. கவிஞரேறு, பாவலர் மணி, தமிழகத்தின் வேட்ஸ்வெர்த் என்ற பெயர்களால்
சிறப்பித்துக் கூறப்படுபவர் - வாணிதாசன்
16. உவமைக் கவிஞர் இத்தொடரால் குறிக்கப்பெறும் சான்றோர் - சுரதா
17. திரைக்கவி திலகம் என அழைக்கப்படுபவர் - மருதகாசி
18. ஈசான தேசிகர் என அழைக்கப்படுபவர் - சுவாமிநாத தேசிகர்
19. செந்தமிழ்ச் செல்வர், தமிழ் பெருங்காவலர், என்ற பெயர்களால் சிறப்பித்துக்
கூறப்படுபவர் - தேவநேயபாவாணர்
20. அமுத அடியடைந்த அன்பர் என அழைக்கப்படுபவர் - மாணிக்கவாசகர்
21. குழந்தை கவிஞர் என அழைக்கப்படுபவர் - அழ.வள்ளியப்பா
22. தண்டகவேந்தர் என அழைக்கப்படுபவர் - திருநாவுக்கரசர்
23. முத்தமிழ் காவலர் என அழைக்கப்படுபவர் - கி.ஆ.பெ.விஸ்வநாதம்
24. எழுச்சி சான்றோர், திருப்புமுனை சிந்தனையாளர் என்ற பெயர்களால் சிறப்பித்துக்
கூறப்படுபவர் - சாலை இளந்திரையன்
25. திருத்தகு முனிவர், திருத்தகு மகா முனிவர் என்ற பெயர்களால் சிறப்பித்துக்
கூறப்படுபவர் - திருத்தக்கதேவர்
26. கோதை என அழைக்கப்படுபவர் - ஆண்டாள்
27. சிறுகதை மன்னன் என அழைக்கப்படுபவர் - புதுமைப்பித்தன்
28. படிக்காத மேதை, கருப்பு காந்தி , கர்ம வீரர் என்ற பெயர்களால் சிறப்பித்துக்
கூறப்படுபவர் - காமராஜர்
29. செக்கிழுத்த செம்மல் என அழைக்கப்படுபவர் - வ.உ.சிதம்பரனார்
30. இலக்கியத்தின் சொல்லின் செல்வர் இத்தொடரால் குறிக்கப்பெறும் சான்றோர் -
இரா.பி.சேதுபிள்ளை

Comments